ஜூஸ் கேட்ட கஸ்டமருக்கு… சப்ளையர் என்ன கொடுத்தார் தெரியுமா? – மருத்துவமனையில் 7 பேர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கடந்த ஜன. 16ஆம் தேதி வூகாங் என்ற பெண்மணி அவரின் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். உணவகத்தில் அவர்கள் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த உணவகத்தின் பணியாளர் அவர்களுக்கு பாட்டிலில் ஒரு ஜூஸை கொண்டு வந்துள்ளார். 

அனைவரும் அதை குடித்த ஓரளவுக்கு குடித்த பின், அவர்களுக்கு ஏதோ அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த 7 பேருக்கும் வயிற்றில் எந்த உணவு பொருள்களுக்கும் இல்லாத அளவிற்கு முழுவதுமாக சுத்தப்படும் முறையை மேற்கொண்டு, அவர்களுக்கு உடல்நிலையை மருத்துவர்கள் சீராக்கியுள்ளனர். இதை, வூகாங் என்ர பெண்மணி வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த வீடியோவை சிறிதுந நாள்களில் டெலிட் செய்துவிட்டார். 

இருப்பினும், இந்த தகவல் உள்ளூர் ஊடகங்களின் வழியாக வெளிச்சத்திற்கு வர தொடங்கியது. அதில், பார்வை கோளாறு உள்ள பணியாளர் பாட்டிலில் கொண்டு வந்த பானம்தான் பிரச்னை என்றும் அது ஜூஸ் இல்லை என்றும் தெரியவந்தது. அந்த பணியாளருக்கு பார்வையில் குறைபாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் ஜூஸ் கலவைக்கு பதில் தரையை சுத்தம் செய்யும் சோப்பு பொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இதயம் முதல் ஆணுறுப்பு வரை: என்றும் இளமைக்கு 2 மில்லியன் டாலர் – கோடீஸ்வரரின் வினோத சிகிச்சை

ஜூஸ் பொடி வடிவில் சோப்பு பொடி

அந்த பணியாளர், அந்த உணவகத்தில் வேலை செய்பவர் இல்லை என்றும் அவ்வப்போது வந்து உதவிசெய்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அவர் எந்த வகை சோப்பு பொடியை அவரின் வாடிக்கையாளருக்கு கலந்து கொடுத்தார் என்பது இன்னும் தெரியவரவில்லை. ஏனென்றால், சீனாவில் பல தரையை சுத்தம் செய்ய பயன்படும் சோப்பு பொடிகள், ஆரஞ்சு ஜூஸ் பொடி, போன்றுதான் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சோப்பு பொடி கவரில், வெளிநாட்டு மொழியில்தான் எழுதியதிருப்பதால் மக்களால் அதை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட  பெண்மணி வூகாங் தான் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில்,”இங்கு படுத்திருக்கும் அத்தனை பேரையும் உங்களுக்கு காட்டுகிறேன், பாருங்கள். நாங்கள் 7 பேரும் ஒன்றாக உணவருந்த உணவகத்திற்கு சென்றோம். தற்போது நாங்கள் ஒன்றாக எங்கள் வயிறை சுத்தம் செய்துள்ளோம். முதலில் என் கணவர்தான் அந்த பானத்தை குடித்து, சற்று கசப்பதாக எங்களிடம் கூறினார். தொடர்ந்து, நான் ஒரு மிடறு அருந்தினேன், உடனே என் தொண்டையில் பிரச்னை ஏற்படுவதை நான் உணர்ந்தேன்” என்றார். தற்போது, இந்த 7 பேரும் நலமுடன் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட உணவகத்தில் இழப்பீடு கோர உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | கொரோனா கொடுத்த பாதிப்பு! மூன்றே வருடத்தில் வீதிக்கு வந்த சீனாவின் ‘அம்பானி’!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.