சென்னை: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய்(30), ஜெயா(23), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு, ரிஷிகா, விஷிகா என ஒன்றரை வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.
வெளிநாட்டு வேலை
வேலைக்காக விஜய் வெளிநாடு சென்ற நிலையில், குழந்தைகளுடன் ஜெயா தனது மாமனார் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். விஜய் துபாயில் இருக்க, விஜயின் பெற்றோர் கண்ணன் செல்வி தம்பதியினருடன் பென்னக்கோணம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார் ஜெயா.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டிய தாய்
இந்நிலையில் நேற்று வழக்கம் போல், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற ஜெயா, காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகப்பட்டு ஒரு ரூமை திறந்து பார்த்த போது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து கிடந்ததோடு, ஜெயா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது அவரது மாமனார் மாமியாருக்கு தெரிய வந்ததுள்ளது.
இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷியாமளா தேவி தலைமையில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மூவரது சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜெயா தனது இரட்டை பெண் குழந்தைகளான ரிஷிகா மற்றும் விஷிகாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது.
தற்கொலைக்கு காரணம் என்ன?
இதனிடைய குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் செல்வி தம்பதியினர் ஜெயாவையும் அவரது குழந்தைகளையும் கொலை செய்து விட்டதாக ஜெயாவின் குடும்பத்தார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இளம் பெண் ஒருவர் தனது இரண்டு இரட்டை பெண் குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும், சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.