கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் நடுத்திட்டு பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மகன் கூலி தொழிலாளியான பாரதி(28) அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டிற்கு வரும் பொழுதும், அவரை பின்தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் உயிரிழந்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமியின் தாய், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் சிறுமையை தங்க வைத்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த சிறுமி திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறுமியை தேடி பாரதியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு பாரதி சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாரதியை கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.