தூக்கி வானில் வீசப்பட்ட பயணிகள்: பெருவில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் மரணம்


பெருவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து குன்றின் மீது கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து கவிழ்ந்து விபத்து

60 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று, சனிக்கிழமை வடமேற்கு பெருவில் உள்ள குன்றில் இருந்து கவிழ்ந்ததை தொடர்ந்து, அதில் 24 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிமாவில் இருந்து ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த கொரியாங்கா டூர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, ஆர்கனோஸ் நகருக்கு அருகே சாலையில் டெவில்ஸ் வளைவு” என்று அழைக்கப்படும் கடினமான இடத்தில் விபத்திற்குள்ளாகியதாக உள்ளூர் ஊடகங்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூக்கி வானில் வீசப்பட்ட பயணிகள்: பெருவில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் மரணம் | 24 Dead After Bus Plunges Over Cliff In PeruAFP

விபத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

மருத்துவமனையில் அனுமதி

 பேருந்தில் 60 பேர் வரை பயணம் செய்த நிலையில் இந்த விபத்தில் 24 பேர் வரை பலியாகி உள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் லிமாவிற்கு வடக்கே சுமார் 1,000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பிரபலமான ரிசார்ட்டுகளான எல் ஆல்டோ மற்றும் மன்கோராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூக்கி வானில் வீசப்பட்ட பயணிகள்: பெருவில் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் மரணம் | 24 Dead After Bus Plunges Over Cliff In Peruistock

இதில் சில பயணிகள் ஹெய்ட்டி-யை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பல பயணிகள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர் மற்றும் சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர் என தகவல் தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.