ஈரோடு கிழக்கு தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எப்போ?

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான
கே.என்.நேரு
, பொதுபனித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் உதகை ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3.2.2023 மதியம் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறார் என்றும், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 1. 2. 2023 அன்று மாலை பிளாட்டினம் மஹாலில் நடைபெற உள்ளது” எனவும் தெரிவித்தார்.

“பொதுக் கூட்டங்களைவிட மக்களை நேரில் சந்திப்பது சிறந்தது என்பதால் நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம் என்றும், வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனவும் அவர் ஈரோட்டுக்கு வருகை தரவுள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனவும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.