
பெருவின் தலைநகர் லீமாவிலிருந்து தும்பெஸ் நோக்கி, 60 பயணிகளுடன் சென்ற பேருந்து, ஆர்கானோஸ் பகுதியில் மலையிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

துருக்கி-இரான் எல்லைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் காயமடைந்தனர்.

இளவரசி டயானாவின் ஆடை ரூ.4.9 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. இந்த பர்ப்பிள் நிற வெல்வெட் ஆடை எதிர்பார்த்ததைவிட ஐந்து மடங்கு அதிக தொகைக்கு ஏலம் போயிருக்கிறது.

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எலீனா ரிபகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் அரீனா சபலெங்கா.

அமெரிக்காவில் காவல்துறை தாக்குதலில் டயர் நிக்லோல்ஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த மிக்கேல்லா ஷிஃப்ரின் தனது 85-வது மகளிர் பனிச்சறுக்கு உலகக்கோப்பையை வென்றார்.

சிலியிலுள்ள லஸ்கர் எரிமலையில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுவதால், அருகில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் எரிவாயு மானியங்களை எதிர்த்துப் பேரணியாகச் சென்றனர்.

உக்ரைன் படைகள் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ராணுவம் குற்றம்சாட்டியிருக்கிறது.