‘ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., புகார் அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யுமான சி.வி.சண்முகம், நேற்று டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டபை தேர்தல் நடைபெறவுள்ள, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களில் நான்கில் ஒரு பங்கினர் அந்த தொகுதியிலேயே இல்லை. இறந்த வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை.
பலர் முறையான விலாசத்தில் வசிக்கவில்லை. இதேபோல பட்டியலில் பெயர் உள்ளது; விலாசமும் உள்ளது. ஆனால், அந்த இடத்தில் குடியிருப்பே இல்லை என்பதுதான் உண்மை.
இதற்கு, ஆளுங்கட்சி சொல்பேச்சைக் கேட்டு நடக்கும் அதிகாரிகள் தான் காரணம். மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதை தடுக்காமல், நியாயமான தேர்தல் நடத்த முடியாது.
வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
ஈரோடு கிழக்கில், சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடக்க வேண்டுமெனில், வாக்காளர் பட்டியலை சரி பார்த்து திருத்த வேண்டும். தவறிழைத்த அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement