கோலியின் இடத்திற்கு இவர் தான் சரியானவர்! தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்


விராட் கோலியின் இடத்தை நிரப்புவதற்கு ராகுல் திரிபாதி சரியான தேர்வாக இருப்பார் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


டி20 போட்டி

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தற்போது விளையாடி வருகிறார்.

இலங்கை, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

அவரது இடத்தில் ராகுல் திரிபாதி விளையாடினார்.

ராகுல் திரிபாதி/Rahul Tripathi

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் 22 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகள் உட்பட 44 ஓட்டங்கள் குவித்தார்.

மூன்றாவது வரிசை

இந்த நிலையில் கோலியின் இடத்தில் விளையாட ராகுல் திரிபாதி தான் சரியான தேர்வாக இருப்பார் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அவர் ராகுல் திரிபாதி குறித்து கூறுகையில், ‘ஒருவேளை அவர் நல்ல ஐபிஎல் கிரிக்கெட்டை வைத்திருப்பார். ஆனால் அப்படி இல்லாமலும் இருக்கலாம். எனினும், இந்திய அணியின் 3வது வரிசை என்று வரும்போது அவர் அதற்கு தகுதியானவராக இருப்பார்.

விராட் கோலி விளையாட வேண்டும் என்று நினைத்தால் சரி, ஆனால் அவர் விளையாட விரும்பவில்லை என்றால் முதல் வாய்ப்பாக திரிபாதி இருப்பார். எங்கும் சிறப்பாக விளையாடக் கூடியவர் அவர்’ என தெரிவித்துள்ளார்.

கோலி-தினேஷ் கார்த்திக்/Kohli-Dinesh Karthik

@PTI

ராகுல் திரிபாதி இதுவரை 5 டி20 போட்டிகளில் 97 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடர்களில் 1798 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் திரிபாதி/Rahul Tripathi

@BCCI/Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.