அவமானத்தை கழுவ கொன்றேன்! நாட்டை விட்டு வெளியேற நினைத்த இளம்பெண்..ஆணவக்கொலை செய்த தந்தை வாக்குமூலம்


ஈராக்கில் யூடியூப் பிரபலம் தனது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

யூடியூப் பிரபலம்

திபா அல்-அலி (22) என்ற இளம்பெண் ஈராக்கில் பிரபல யூடியூபராக இருந்து வந்தார்.

சிரியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை திபா காதலித்து வந்துள்ளார். ஆனால் இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் 2017ஆம் ஆண்டு தனது தாயகத்தை விட்டு வெளியேறிய அவர், தனது காதலரை திருமணம் செய்துகொண்டு துருக்கியில் புதிய வாழ்வை துவங்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் ஜனவரி மாதம் நடந்த அரேபிய வளைகுடா கோப்பையில், தனது நாட்டின் கால்பந்து அணிக்கு ஆதரவளிக்க திபா ஈராக் திரும்பியுள்ளார்.

திபா அல்-அலி/Tiba al-Ali

@tubaal1/CEN

குடும்பத்தினர் கடத்தல்

அப்போது அவரது குடும்பத்தினர் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இந்த விடயம் காவல்நிலையம் சென்றதால் அங்கு திபா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே சமரசம் செய்து வைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் திபாவுக்கு போதைப்பொருள் கொடுத்து வீட்டிற்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திபா அல்-அலி/Tiba al-Ali

@tubaal1/CEN


கொலை செய்த தந்தை

அங்கு தனது தந்தையுடன் திபா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மகளின் அறைக்கு சென்ற அவரது தந்தை, தூங்கும் போது அவரை கொலை செய்துள்ளார். ஜனவரி 31ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

திபாவின் மரணம் சமூக வலைதளங்களில் ஈராக்கியர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது தந்தை தாமாக பொலிஸாரிடம் சரண் அடைந்தார்.

அவர் ”அவமானத்தை கழுவுவதற்கு” தனது சொந்த மகளை கொன்றதாக பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      

திபா அல்-அலி/Tiba al-Ali

@tubaal1/CEN



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.