பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்


பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று தகவல் தெரியவந்துள்ளது. 

வாணி ஜெயராம்

இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.  

19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய இவர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். 

கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். 

பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் | Singer Vani Jayaram Passed Away

சினிமா பயணம்

1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.

1971ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடகியாகவே கோலோச்சி வந்தவர்.

தமிழகம், ஆந்திரம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளை வாணி ஜெயராம் பெற்றுள்ளார்.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். 

அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 

பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் | Singer Vani Jayaram Passed Away

இறப்பு

இந்நிலையில் இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வாணி ஜெயராம் உயிரிழந்து கிடந்தார் என தகவல் பலரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

வாணி ஜெயராமின் மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இசையுலகத்தைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.