Vignesh Shivan: இந்த சோகத்திலும் அஜித் சொன்னதை மட்டும் மறக்காத விக்னேஷ் சிவன்

AK 62: ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டது உறுதியாகிவிட்டது. விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அதை உறுதி செய்திருக்கிறது.

ஏ.கே. 62அஜித் குமாரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது இயக்குநர் விக்னேஷ் சிவனின் கனவு. அந்த கனவு நினைவான சந்தோஷத்தில் இருந்தார். ஏ.கே. 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க, படப்பிடிப்பு பொங்கல் பண்டிகை முடிந்ததும் துவங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குநரை மாற்றிவிட்டார்கள்.
விக்னேஷ் சிவன்ஏ.கே. 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய ஸ்க்ரிப்ட் பிடிக்கவில்லை என்று கூறி அதை மாற்றச் சொன்னாராம் அஜித் குமார். ஆனால் முழு ஸ்க்ரிப்ட்டையும் கொடுப்பதில் விக்னேஷ் சிவன் தாமதம் செய்தாராம். இதையடுத்து இது வேலைக்கு ஆகாது என்று அவரை மாற்றிவிட்டார்களாம். இருப்பினும் இதை லைகா நிறுவனம் உறுதி செய்யவில்லை.
ட்விட்டர்AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்ஏ.கே. 62 பட வாய்ப்பு கிடைத்ததும் ட்விட்டரில் அஜித் குமாரின் புகைப்படத்தை கவர் பிக்சராக வைத்திருந்தார் விக்னேஷ் சிவன். ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்று பேச்சு எழுந்தபோது கூட அந்த புகைப்படம் அப்படியே இருந்தது. இந்நிலையில் தான் கவர் பிக்சரை மாற்றிவிட்டார். அஜித் புகைப்படத்தை நீக்கிவிட்டு ஊக்கமளிக்கும் வாசகத்தை வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அஜித்நெவர் கிவ் அப் என்கிற வாசகத்தை கவர் பிக்சராக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இது அஜித் குமார் சொன்னதாச்சே. அஜித் கைவிட்டாலும் அவர் சொன்னதை விக்னேஷ் சிவன் மறக்கவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள் அன்பான இயக்குநரே, அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பு நிச்சயம் உங்களை தேடி வரும். அதுவரை நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

​Nayanthara, AK62: அஜித்துக்கு போன் செய்த நயன்தாரா: அதிர வைத்த தல?

லண்டன்அஜித் லண்டன் சென்ற வேகத்தில் விக்னேஷ் சிவனும் சென்றார். அங்கிருந்து சந்தோஷமாக போஸ்ட் போட்டு வந்தார். அதை பார்த்தவர்களோ, ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படவில்லை போன்று என்றார்கள். ஆனால் அவரை நீக்கிவிட்டார்கள். அந்த சோகத்திலும் கூட விக்னேஷ் சிவனால் எப்படித் தான் பாசிட்டிவாக போஸ்ட் போட முடிந்ததோ என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அனிருத்ஏ.கே. 62 படத்தை மகிழ்திருமேனி இயக்கப் போகிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து ஏ.கே. 62 படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டாராம். விக்னேஷ் சிவனும், அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.