<span class="follow-up">NEW</span> லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு! புதிய விலை விபரம்


புதிய இணைப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 4,743 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,904 ரூபாவாகும். 

இதேவேளை, 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய அதன் புதிய விலை 883 ரூபாவாகும். 

முதலாம் இணைப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில்  எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

விலை திருத்தம்

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு! புதிய விலை விபரம் | Litro Gas Price Increased Sri Lanka

இதன்படி 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரி 5ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது 12.5 கிலோகிராம் எடைகொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இதன்படி குறித்த எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 409 ரூபாவாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 770 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.