மதுபோதையில் மனைவியை தாக்கிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்!!

மதுபோதையில் மனைவியை தாக்கிய முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ளிக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான வினோத் காம்ளி இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவரும், சச்சின் டெண்டுல்கரும் நெருங்கிய நண்பர்கள். காம்ளி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

2015ஆம் ஆண்டு மதுபோதையில் கார் ஒன்றை தாக்கியதற்காக வினோத் காம்ளி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அதே போல் வீட்டுப்பணியாளரை தாக்கிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு வினோத் காம்ளி மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது வினோத் காம்ளி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த காம்ளி, சமையல் செய்யும் பாத்திரத்தால் அவரது மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் தலையில் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய ஆண்ட்ரியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு பாந்த்ரா காவல்நிலையம் சென்று வினோத் காம்ளி மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வினோத் காம்ளி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பாந்த்ரா காவல்துறையினர் வினோத் காம்ளியின் வீட்டிற்கு சென்று, புகார் குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்பட்டவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காம்ப்ளி பேட் ஒன்றை எடுத்து, மனைவியை அடிக்க முயற்சித்துள்ளார். ஆனாலும் அவரை தடுத்து பேட்டை பறித்த மனைவி ஆண்ட்ரியா, அதன்பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.