தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது..!!
தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கப் பள்ளி கல்வித்துறையின் கீழ் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 2 லட்சம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் தொழில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கும் முறை 2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் கணினி மூலம்தான் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஆசிரியர்கள் விடுப்பு நிர்வாக முறையீடு (TN-SEC School App) என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த செயலில் ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலம் தங்களுக்கு தேவைப்படும் பொழுது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
அப்பொழுது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் கணினி மூலம் அதை சரி பார்த்து ஆசிரியர்களுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இந்த செயல் முறையை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரி பார்ப்பார்கள்.
இந்த விவரங்களை சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாக முறையின் கீழ் கண்காணிக்கப்படும். ஆசிரியர் விடுப்புக்கான இந்த புதிய செயலி மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கிற விடுமுறை நாட்கள், எத்தனை மருத்துவர்கள் நாட்கள் இருப்பு இருக்கிறது, சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்கள் ஆசிரியர்களை தெரிந்து கொள்ள முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.