அரசாங்கத்தின் வரி விதிப்பால் 500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்


அரசாங்கத்தின் வரி விதிப்பால் அண்மைய நாட்களில் சுமார் 500
வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்
செயலாளரான வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6
சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுகின்றது என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கத்தின் வரி விதிப்பால் 500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம் | 500 Doctors Expelled From The Country

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உட்பட ஏனைய தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால்
எதிர்காலத்தில் பாரிய சிக்கல் உருவாகும்.

நாட்டிலிருந்து செல்லும் வைத்தியர்கள்

வைத்தியர்கள் நாட்டுக்கு சேவை
செய்யக்கூடிய சிறந்த திறமை படைத்தவர்கள்.

எனினும், அண்மைய நாட்களில் சுமார்
500 க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.

அரசாங்கத்தின் வரி விதிப்பால் 500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம் | 500 Doctors Expelled From The Country

வைத்தியத்துறையில், தொழிநுட்பத் துறையில் பணியாற்றுபவர்களும் நாட்டை
விட்டுச் செல்ல முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.