கனடாவில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் அங்கிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீப்பிடித்த வீடு
நோவா ஸ்கோடியாவின் அனபோலிஸ் கவுன்டியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிவதாக இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு போன் வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.
அவர்கள் சென்ற போது வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது.
File/saltwire
பெண் சடலம்
பிறகு வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.