”விவசாயி.. விவசாயி.. கடவுள் எனும் முதலாளி”.. டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுத தோனி! வீடியோ

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் தோனியின் சாதனைகள், தோனியின் பெருந்தன்மைகள், தோனியின் வெற்றிகள், தோனியின் மென்மை, தோனியின் பொறுமை என நாள்தோறும் அவரைப் பற்றிய பல விஷயங்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியின் போதும் இன்றளவும் ஏதேனும் ஒரு வகையில் தோனியை நினைவு கூர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  இப்படி சமூக வலைத்தளங்கள் தோனியால் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க, தோனியோ சத்தமில்லமால் இருக்கும் அமைதியான பண்ணை வீட்டில் இயற்கை விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.
image
தோனி தனது பண்ணை வீட்டில் உள்ள 40 முதல் 50 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் இயற்கை முறைப்படி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலமே தனது இடத்தில் தோனி விவசாயம் செய்து வருகிறார். அந்த வகையில்தான் தற்போது,  விவசாய நிலத்தில் தோனி டிராக்டர் ஒட்டி உழும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தோனி விவசாய நிலத்தில் ஏதேனும் செய்து கொண்டிருக்கும் வீடியோ வெளியாவது இது புதிதல்ல. இதற்கு முன்பும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
image
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்த வீடியோ ஒன்றில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளில் இருக்கும் ஆபத்து குறித்தும், இயற்கை விவசாயத்தின் நன்மை குறித்தும் தோனி விளக்கி பேசியிருந்தார். 
image
அதேபோல், தோனி தன்னுடைய நிலத்தில் விதைகளை ஊன்றும் வீடியோயும், விவாசயத்தை தொடங்குவதற்காக பூஜை செய்யப்பட்ட வீடியோவும் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான ஏற்பாடுகளை சரியான முறையில் திட்டமிட்டு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு வகையாக தொழில்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், விவசாயத்தை தேர்வு செய்தது உண்மையில் அற்புதமான விஷயமே.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.