இந்தியாவை விரைவில் நிலநடுக்கம் தாக்கும்! துருக்கி பேரழிவை 3நாட்களுக்கு முன்பே கணித்த நபர் எச்சரிக்கை


துருக்கி சிரியா நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பு கணித்த டச்சு ஆய்வாளர் ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவில் நிலநடுக்கம் வரும் என எச்சரித்துள்ளார்.

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை முன்னரே கணித்த ஆய்வாளர்

 சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயில் (SSGEOS) நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளரான நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்பவர் துருக்கியில் மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் மூன்று நாட்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தார்.

இது தொடர்பாக பிப்ரவரி 3ம் திகதி ட்விட்டரில் அவர் வெளியிட்டு இருந்த பதிவில்,  தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் விரைவில் ஏற்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்தியாவை விரைவில் நிலநடுக்கம் தாக்கும்! துருக்கி பேரழிவை 3நாட்களுக்கு முன்பே கணித்த நபர் எச்சரிக்கை | India Will Affect The Huge Earthquake ResearcherTwitter

அங்கீகரிக்கப்பட்ட நில அதிர்வு ஆய்வாளர்கள் பொதுவாக ஃபிராங்க் ஹூகர்பீட்ஸின் கணிப்புகள் தவறானவை என்றும் அறிவியலற்றவை என்றும் நிராகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்  வெளியிட்ட எச்சரிக்கையை போலவே துருக்கி மற்றும் சிரியாவை கடந்த திங்கட்கிழமை 7.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

இந்தியாவையும் நிலநடுக்கம் தாக்கும்

இந்நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தொடங்கும் இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக இந்தியப் பெருங்கடலில் வந்து முடியும் என அவர் எச்சரித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.