15 நிமிடங்கள் குளியலறையில் இறந்துகிடந்த பெண்: பல ஆண்டுகள் கடந்து மீண்டும் உயிர்பெற்றது போல் ஏற்பட்ட உணர்வு…


அமெரிக்காவில் குளியலறைக்குச் செல்லும்போது திடீரென சுயநினைவிழந்தார் ஒரு பெண். அவர் கண்விழிக்கும்போது பல ஆண்டுகள் கழித்து தான் உயிர்பெற்றதுபோல் தனக்குத் தோன்றியதாக தெரிவித்துள்ளார் அவர்.

15 நிமிடங்கள் 5 ஆண்டுகளான ஆச்சரியம்

Dr Linda Kramer என்னும் அந்தப் பெண், குளியலறைக்குச் சென்ற நேரத்தில் திடீரென சுயநினைவிழந்தார். தான் ஆழ்ந்த தூக்கத்திருப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் அவரது உயிர் அவரது உடலைப் பிரிந்துவிட்டது. மருத்துவ உதவிக்குழுவினர் போராடி 15 நிமிடங்களில் அவரை மீட்டுள்ளனர்.

ஆனால், 5 ஆண்டுகள் தான் சொர்க்கத்திலிருந்ததுபோல் உணர்ந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

15 நிமிடங்கள் குளியலறையில் இறந்துகிடந்த பெண்: பல ஆண்டுகள் கடந்து மீண்டும் உயிர்பெற்றது போல் ஏற்பட்ட உணர்வு... | Dead And Spent 5Years In Heaven

நடந்தது இதுதான் என்கிறார் Linda

தனது உயிர் உடலைப் பிரிந்ததும், தான் சொர்க்கத்துக்குச் சென்றதாகக் கூறும் Linda, அங்கு தான் நினைத்த உருவத்தைத் தன்னால் எடுக்கமுடிந்ததாகவும், எங்கே போகவேண்டுமென அவர் மனதில் நினைத்தாரோ அங்கெல்லாம் தன்னால் போகமுடிந்ததாகவும் தெரிவிக்கிறார்.

தான் மலர்கள் நிறைந்த ஒரு புல்வெளியில் நின்றதாகக் கூறும் Linda, தனக்குப் பின்னால் மிக உயரமான, அதாவது சொல்லப்போனால், எவரெஸ்ட் சிகரத்தைவிட 30,000 மடங்கு பெரிய மலைகள் இருந்ததைத் தான் கண்டதாகத் தெரிவிக்கிறார்.

துபாயில் இருக்கும் வானுயரக் கட்டிடங்கள் எல்லாம் சொர்க்கத்தில் தான் கண்ட கட்டிடங்களைப் பார்க்கும்போது குட்டியாகத் தெரிந்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.

இப்படி அங்குள்ளவர்களிடம் அவர் அளவளாவிக்கொண்டிருக்கும்போதுதான் Lindaவை மருத்துவர்கள் மீட்டுவிட்டார்கள்.

கண்விழித்த Linda, தான் குறைந்தது 5 ஆண்டுகள் சொர்க்கத்தில் செலவிட்டதுபோல் தனக்குத் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.

யூடியூபில் வெளியான Lindaவின் வீடியோவை 159,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.