Flip Heart Days Sale 2023: காதலர் வார குதூகலம், பிளிப்கார்ட்டில் 80% தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்

Flip Heart Days Sale 2023: காதலர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! காதலர் வாரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், காதல் உணர்வு ததும்பி வழியும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து பிப்ரவரி 6 முதல் ஃபிளிப் ஹார்ட் டேஸ் சேல் 2023ஐ (Flip Heart Days Sale 2023) துவக்கியுள்ளது. இதில், 80 சதவீதம் வரை தள்ளுபடியில் ஷாப்பிங் செய்யலாம். இந்த விற்பனை பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறுகிறது. 

குறிப்பாக இந்த Flip Heart Days Sale 2023-ல் பல வகையான பரிசுகள், மிகவும் கவர்ச்சிகரமான டீல்கள் மற்றும் சலுகைகளும் கிடைக்கின்றன. ஏற்கனவே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தி பிளிக்பார்ட்டின் இந்த சேலில் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். 

Flip Heart Days Sale 2023: விற்பனையில் எதில் எவ்வளவு தள்ளுபடி

– ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில், 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் பரிசு அட்டைகளுக்கு (கிஃப்ட் வவுச்சர்) 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். 

– Ecraftindia -வில் 50% வரை தள்ளுபடி கிடைக்கிறது

– Indigifts-ல் 80% வரை தள்ளுபடி கிடைக்கிறது. 

இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஜூவல்லரி காம்போ, குஷன் காம்போ, கீசெயின் காம்போ, ஷோபீஸ் காம்போ, வாட்ச் காம்போ, ஆர்டிபிஷியல் காம்போ ஆகியவற்றிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கும். 

– வாசனை திரவியங்கள், தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), கிஃப்ட் பாக்ஸ் ஆகியவற்றிலும் அதிரடியான தள்ளுபடிகளைப் பெறலாம்.

பயணம் முதல் பரிசுகள் வரை அனைத்திற்கும் சிறந்த சலுகைகள்

– Flip Heart Days Sale 2023 இன் கீழ், பிளிப்கார்ட், சர்வதேச விமான முன்பதிவுகளில் ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. 

– இது தவிர, உள்நாட்டு விமான முன்பதிவுகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும், இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமான முன்பதிவுக்கு 20 சதவீத தள்ளுபடியும் பெறலாம். 

– வெறும் ரூ.999 ஈஎம்ஐ-யில் மாலத்தீவுக்குச் செல்ல முடியும். 

– மேலும், பிளிப்கார்ட் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தால், 60 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இந்த பலன்கள் கிடைக்கும்

உங்களிடம் Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், இந்த சலுகையின் கீழ் நீங்கள் எப்போதும் 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக்கைப் பெறலாம். இது மட்டுமின்றி, இந்த விற்பனையில் (Flip Heart Days Sale 2023) நீங்கள் ஷாப் நவ் அண்ட் பே லெட்டர் வசதியையும், கிஃப்ட் கார்டைப் பெறுவதற்கான பலனையும் பெற முடியும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.