வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து மகா சபை சார்பில், இந்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது: பிபிசி வேண்டுமென்றே இந்தியாவின் மதிப்புக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது. ஆவணப்படத்தின் பின்னணியில் உள்ள சதியை ஆராய வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு ஆவணப்படம் எப்படி நாட்டை பாதிக்கும். இந்த மனு தவறானது. மனுதாரர் கோரியபடி எப்படி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க முடியும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement