மார்ச் மாதம் முதல்… சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி


மார்ச் மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் பலர் கூடுதல் வாடகை செலுத்தவேண்டிவரலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வாடகை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, புதிதாக ஒருவர் வாடகைக்கு ஒரு வீட்டுக்குச் செல்வாரானால், அவர் முன்னிருந்தவரைவிட கூடுதல் வாடகை கொடுக்க நேரிடும். பல நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.

ஆனால், அடுத்த மாதம், அதாவது மார்ச் மாதம் முதல், ஏற்கனவே வீடுகளில் குடியிருப்போர் கூட கூடுதல் வாடகை செலுத்தும் ஒரு நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது.

எதனால் இந்த வாடகை உயர்வு?

இந்த வாடகை உயர்வுக்குக் காரணம், mortgage reference rate என்னும் விடயமாகும். அதாவது, வாடகை உட்பட மற்ற வரி வீதங்கள் உயர்த்தப்படுவது இந்த mortgage reference rate என்னும் விடயத்தின் அடிப்படையில்தான். இந்த mortgage reference rate சுவிட்சர்லாந்தில் அதிகரிக்க உள்ளது.

இந்த உயர்வு வீட்டு உரிமையாளர்களை பாதிக்கும் என்பதால், வீட்டு உரிமையாளர்கள் அந்த உயர்வை வாடகைக்கு இருப்பவர்கள் தலையில் சுமத்துவார்கள்.

மார்ச் மாதம் முதல்... சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி | Swiss Tenants Face Higher Rent Costs From March

Photo: Pixabay

அதனால் என்ன நடக்கும்?

நீங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டு வாடகை இந்த mortgage reference rate அடிப்படையிலானது என்றால், அது உங்களை பாதிக்கும். இல்லையென்றால் உங்களுக்குப் பிரச்சினையில்லை.

இந்த உயர்வு மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பரிலும் mortgage reference rate அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.