திருச்சி: எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார். திருச்சியிவ்ல நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி […]
