காஸியான்டெப்: நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை, ௧9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், உயிர் தப்பியவர்கள் போதிய உணவு, குடிநீர் இல்லாமல், பொது இடங்களில் கடும் குளிரில் நடுங்கி வருகின்றனர்.
மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த, ௬ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது, ௭.௮ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், ௬,௦௦௦க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாயின.
மீட்பு பணிகள்
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி, நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்தியா உள்பட பல நாடுகள், மீட்புப் படையினரை அனுப்பி வைத்துள்ளன. அவர்கள் கட்டட இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியுள்ளோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களாகியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மிகுந்த நம்பிக்கையுடன், மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில், சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொத்து கொத்தாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று, ௧9 ஆயிரத்தை தாண்டியது.
துருக்கியில் ௧6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ௬௩ ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிரியா அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அங்கு, ௩,௧௦௦ பேர் உயிரிழந்துள்ளனர்; ௫,௦௦௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் வேகமாக நடந்தாலும், கடும் குளிர் மற்றும் மழை இதற்கு இடையூறாக உள்ளது. இதற்கிடையே, சிரியாவில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு முதல் நிவாரண வாகனம், துருக்கி வழியாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள்
நாட்டின் எல்லையைக் கடக்க வேண்டும் என்பதால், ஐ.நா., வாயிலாக இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தரைமட்டமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் அருகே, உயிர் பிழைத்த மக்கள், தங்களுடைய உறவினர்கள் குறித்த தகவல் கிடைக்குமா என, சோகத்தில் காத்திருக்கின்றனர்.
மைதானம், மசூதி உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கூடாரங்களுடன் கூடிய நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கவில்லை. அதனால், பொது இடங்களில், சாலைகளில் பலர் தங்கியுள்ளனர். கடும் குளிர் நிலவுவதால், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
காஸியான்டெப்பில் நேற்று மைனஸ் நான்கு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் மைனஸ் டிகிரி செல்ஷியஸ் அளவுக்கே வெப்பநிலை உள்ளது.
உணவு, குடிநீர் கிடைக்காமல் பலர், நிவாரண வாகனங்கள் வரும்போது அதை நோக்கி முண்டியடித்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை உலுக்குவதாக அமைந்துள்ளது.
ஜப்பானில், ௨௦௧௧ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், ௨௦ ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.அதன்பின், அதிக உயிர்பலியை இந்த நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தது இந்தியாவில்?
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹோகர்பீட்ஸ், ‘அடுத்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தப் பகுதிகளில் ஏற்படும்’ என, சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார். இது நிஜமான நிலையில் பலரும் அதிர்ந்து போயிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள மற்றொரு ‘வீடியோ’ பதிவில் அவர் கூறியுள்ளதாவது:துருக்கி, சிரியாவுக்கு அடுத்தது ஆசியாவில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும். ஆப்கானிஸ்தானில் துவங்கி, பாகிஸ்தான், இந்தியா வழியாக, இந்தியப் பெருங்கடல் வரை கடுமையான பாதிப்பு இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்