இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினரை கடற்றொழில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (09) பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார்.
பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை பொன்னாடை போர்த்தி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.