பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன்; இது எல்லாருக்குமானது என பெருமிதம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, எதிர்க்கட்சிகள் AIIMS மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறினார். இதனால் லோக்சபாவில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

மேலும், ராகுல் காந்தி, அதானி மற்றும் மோடி குறித்து பேசியதை நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து சபா நாயகர் நீக்கியாக கூறினார். ராகுலின் 53 நிமிட உரையில் பேசிய 18 கருத்துக்களை மீண்டும் சேர்க்க வேண்டும், அது ஆதாரத்தின் அடிப்படையிலான பேச்சு எனவும் காங்கிரசார் வலியுறுத்தினர்.

அதானி மற்றும் பிரதமர் மோடியின் நட்பினால் தான் அதனின் சொத்து மதிப்பு இவ்வளவு குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து உள்ளது. அவர் கால் வைக்கும் தொழிலில் எல்லாம் வெற்றி அடைவதற்கு பிரதமர் மோடியே காரணம் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இருவருக்குமான நட்பின் காரணமாகவே பிரதமர் மோடி, அதானி குறித்து நாடாளுமன்றத்தில் இது வரை பேசவில்லை எனவும் கூறினார். இதற்கு பதில் அளித்த மோடி; எதிர்க்கட்சிகள் மோசமான எண்ணத்தில் தவறான கருத்துக்களை கூறி வருவதாக பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து மக்களவையில் உரை ஆற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; ரஷ்யா உக்ரைன் போர், உலகளவில் நிலவி வந்து இருக்க கூடிய பணவீக்கம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்க கூடிய சூழ்நிலையில், மத்திய பட்ஜெட்டை நாம் தாக்கல் செய்து உள்ளோம். இந்தியாவின் பொருளாதாரம் வரக்கூடிய ஒன்று. இனி வரக்கூடிய நாட்களிலும் வேகமாகவே வளரும். புதிய வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்டு உள்ளது.

அரசாங்கத்தால் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

அமைச்சர் ரோஜாவை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்… ஊழியரை செருப்பை எடுக்க சொன்னதால் சர்ச்சை!

விவசாயத்துறைக்கான ஒதுக்கீடு 20 லட்சமாக உள்ளது. 2023 மற்றும் 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பொறுத்தவரை இது அனைவருக்கும் சமமான ஒரு பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரைக்கும் இருக்க கூடிய கால கட்டத்தில் சில மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது.

PM கிசான் திட்டத்தில் தகுதி உடையவர்கள் அனைவருக்கும் வருடம் தோறும் 6000 ரொக்கம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சிக்கான தேவை மற்றும் பொருளாதார தன்மை என அனைத்தையும் சிந்தித்து இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மேலும், முதலீடு செலவினங்களுக்கு இந்த பட்ஜெட்டில் 10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களின் நலன் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மாநிலங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்க்கத்திற்கு 7 லட்சம் வரை எந்தவிதமான வருமான வரி கிடையாது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு சேமிப்பு தொகையானது 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 7.5 சதவீத வட்டியுடன் பெண்களுக்கான பிரத்யேக சிறுசேமிப்பு திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரதமர் வீடு காட்டும் திட்டத்திற்கான நிதியும் அதிகரிக்கப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.