5 மாநிலங்களில் 5 ஆடம்பர பங்களா.?: தனது சொத்து மதிப்பு குறித்து ராஷ்மிகா கொடுத்த அதிர்ச்சி.!

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ராஷ்மிகா, ‘சுல்தான்’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ராஷ்மிகா, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து கன்னட படங்களில் நடித்து வந்த இவர் சலோ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் பிரபலமானார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட் ஆவதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றதாக இணையத்தில் செய்திகள் பரவியது. ஆனால் இதனை மறுத்த ராஷ்மிகா, அவர் தனக்கு நல்ல நண்பர் தான் என தெரிவித்திருந்தார்.

LEO: ‘லியோ’ படம் குறித்து மரண மாஸ் தகவல் சொன்ன அர்ஜுன்: தரமான சம்பவம் கன்பார்ம்.!

இந்நிலையில் அண்மையில் வெளியான விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இந்தப்படத்தில் அவருக்கு காட்சிகளே இல்லை என்றும் பாடலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, இதெல்லாம் தெரிஞ்சு தான் ‘வாரிசு’ படத்தில் நடித்தேன். விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்படத்தில் நடித்தேன் கூறியிருந்தார்.

Pichaikaran 2: மிரட்டலாக வெளியான ‘பிச்சைக்காரன் 2’ வீடியோ: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.!

இவ்வாறு சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சினிமாவில் பிசியாக வலம் வரும் ராஷ்மிகா, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா குறித்த மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 5 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு என 5 இடங்களில் சொகுசு பங்காளவை அவர் வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துளள ராஷ்மிகா, இது உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பாசிட்டிவ்வான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.