Dada: அப்படியே அந்ந படத்தோட அட்ட காப்பி… டாடா படத்தை கழுவி ஊற்றிய ப்ளுசட்டை மாறன்!

கவின் நடிப்பில் வெளியாகியுள்ள டாடா படத்தை வச்சு செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

கவின் நடிப்பில்விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்புகளை பெற்று வருகிறார் கவின். அந்த வகையில் கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது டாடா திரைப்படம் வெளியாகியுள்ளது. ​ Dada Review: டாடா படம் பிடிக்கலன்னா.. டிக்கெட் காசு கொடுத்துடுறேன்… சவால் விடும் பிரபலம்!​
பாஸிட்டிவ் விமர்சனம்இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கணேஷ் கே இயக்கியுள்ளார். டாடா படத்தில் அபர்ணாதாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. கல்லூரி பருவத்தில் கவினும் அபர்ணாதாஸும் காதலித்து வருகின்றனர்.
​ Rachitha Mahalakshmi: மறக்க முடியாத நாள்.. கதறல் போட்டோவை வெளியிட்ட பிக்பாஸ் ரச்சிதா.. தேற்றும் ரசிகாஸ்!​
குழந்தைஇதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிறார் அபர்ணா தாஸ். கருவை கலைக்கும் படி கவின் கூற, முடியவே முடியாது என கூறும் அபர்ணா தாஸ் வீட்டை விட்டு வெளியேறி கவினுடன் வாழ்ந்து வருகிறார். பின்னர் குழந்தையை கவினிடம் விட்டுவிட்டு பிரிந்து செல்கிறார். கவின்தான் அந்த குழந்தையை வளர்க்கிறார். எப்படி குழந்தையை வளர்க்கிறார் கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் டாடா படத்தின் கதை. ​ Rajinikanth: திமிராய் நடந்துகொள்ளும் ஐஸ்வர்யா… காதுகளுக்கு போன சேதி.. அப்செட்டில் ரஜினிகாந்த்?​
ப்ளூ சட்டை விமர்சனம்இந்தப் படத்தில் அழுகை, சிரிப்பு, சென்டிமென்ட் என எல்லாமே இருக்கிறது, ஃபீல் குட் டிராமா, வீக்கெண்டில் பார்க்க சிறந்த படம் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன், டாடா படத்தின் கதை அட்டக்காப்பி என விமர்சித்துள்ளார். அதாவது நடிகர் கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் கதை என்றும் அதை இயக்குனர் கணேஷ் கே அப்படியே காப்பி அடித்து திரைக்கதை எழுதி இருக்கிறார் என்றும் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
​ இதுக்காகவே சமந்தா ஜெயிக்கணும்!​
சீரியல்தான் ஞாபகம் வருகிறதுமேலும் களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையையும் டாடா திரைப்படத்தின் கதையையும் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். . மேலும் டாடா படத்தை பார்க்கும் பொழுது தொலைக்காட்சி சீரியல்தான் ஞாபகம் வருகிறது என்றும் கூறியிருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், எத்தனை கோடிகளை கொட்டி படம் எடுத்தாலும் தனது விமர்சனத்தால் அவற்றை தூள் தூளாக்கி வருகிறார் ப்ளூ சட்டை மாறன். ​ Silk Smitha: சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு.. மறுநாள் மனைவி முகத்தை பார்க்க கூச்சப்பட்ட இயக்குநர்!​
தரக்குறைவாக விமர்சனம்திரைப்படங்களை விமர்சிப்பது என்பதையும் தாண்டி படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களையும் உருவ கேலி செய்து வருகிறார். ப்ளூ சட்டை மாறன் நாகரிகமான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என பிரபலங்கள் பலரும் கண்டித்து வருகின்றனர். வாரிசு, துணிவு என விஜய் அஜித் படங்களை வச்சு செய்த ப்ளூ சட்டை தற்போது கவினின் டாடா படத்தையும் வச்சு செய்துள்ளார். ​ Rakhi Sawant: ‘என்னை நிர்வாணமாக படம் பிடித்து’.. இரண்டாவது கணவர் மீது ராக்கி சாவந்த் பகீர் புகார்!​
dada

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.