வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகர்தலா: திரிபுராவில் சேர்தல் பிரசாரத்தில் காங்., ., இடதுசாரி உள்ளிட்ட எதிர் கட்சிகளின் ஊழல்களை கடுமையாக சாடி பிரதமர் மோடி பேசினார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் பிப்.,16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில், பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிபுராவில், இன்று நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி திரிபுராவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பா.ஜ ஆட்சியில் திரிபுரா மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேலோங்க பா.ஜ., அரசு பாடுபட்டு வருகிறது.

திரிபுராவை வன்முறை இல்லாத மாநிலமாக பா.ஜ., மாற்றியுள்ளது. திரிபுராவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு 5 ஆயிரம் கி.மீ சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அகர்தலாவில் ஒரு புதிய விமான நிலையம் கட்டப்பட்டது. வடகிழக்கு மற்றும் திரிபுராவை துறைமுகங்களுடன் இணைக்கும் வகையில் நீர்வழிப் பாதைகளை உருவாக்கி வருகிறோம்.
4ஜி இணைப்பு கிராமங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது, பெண்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது, வாழ்வதற்கு வசதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement