திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு: போட்டு உடைத்த கார்த்தி சிதம்பரம்

தமிழ்நாடு
காங்கிரஸ்
கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெருவார் என நிச்சயம் நம்புகிறேன்.

எனது தந்தை ப.சிதம்பரம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து 17,18 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். நேற்று தான் வேட்புமனு பரிசீலனை முடிந்துள்ளது. இனிமேல் தான் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும். முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வரவுள்ளனர்.

தமிழகத்தில்
திமுக
பெரிய கட்சிதான். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் ஒரு வாக்கு வங்கி உண்டு அதை யாராலும் மாற்ற முடியாது.

அதிமுகவிற்கு நான் புது பெயர் வைத்துள்ளேன். செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்ட கட்சி என்று தான் கூறவேண்டும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருக்கும் வரைதான் ஒற்றுமையான கட்சியாக இருந்தது. தற்போதைக்கு அதிமுக ஒற்றுமையான கட்சியாக இல்லை.

திமுக ஆட்சி முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றும்.

காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல தடவை இதை நான் கூறியுள்ளேன். கொள்கை ரீதியாக ஒன்றாக இருக்கலாம், கருத்துகள் ரீதியாக வேறுபாடுகள் உள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில்7 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி இருக்கலாமே தவிர விடுதலை செய்தது தவறு.

இந்தியாவில் சிறைச்சாலையில் 75 சதவீதம் விசாரணை குற்றவாளிகள் தான் உள்ளனர். குற்றம் நிரூப்பிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பு வந்த பிறகே சிறையில் அடைக்க வேண்டும்.15 நாட்கள் விசாரணை கைதியாக வைத்திருப்பதற்க்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்டு அதாலத் நடக்க வேண்டும். விசாரணைகள் நடத்தப்பட்டு மனித அச்சுறுத்தல் இருக்கும் நபர்கள் மற்றும் கடுமையான குற்றங்களை செய்தவர்களை மட்டும் சிறைகளில் அடைக்க வேண்டும். எனக்கு பெரிய வக்கீல்கள் இருந்ததால் நான் சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்துவிட்டேன்.

எனக்கும் எனது தந்தைக்கும் கூட கருத்து வேறுபாடுகள் இருக்கும். இந்தியாவை பாதளாத்திற்கு கொண்டு செல்லும் பட்ஜெட் எனக்கூறியது அவர் கருத்து. வரி குறைவாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. தனிநபர் மீதுள்ள வரியை குறைத்தால் அதை நான் வரவேற்கிறேன் .

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கியதை செக் கொடுத்ததை காண்பிக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை சுற்றுச்சுவர் கூட கட்டவில்லை. ராமநாதபுரம் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்தனர் என சான்றிதழ் வேண்டுமென்றால் வழங்கலாம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இன்று மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். எனக்கு தாமரை பிடிக்காது ரோஜா தான் எனக்கு பிடிக்கும்” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.