இசை என்பது டெக்னாலஜி அல்ல, டெக்னிக் – இளையராஜா

இந்தியத் திரையுலகின் மதிப்பு மிக்க இசையமைப்பாளரான இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் இந்த மாதம் 26ம் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். அது தொடர்பாக நேற்று ஐதராபாத்தில் அவருடைய ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற கேள்வி, பதில் நிகழ்ச்சியில் “இசைக்கு டெக்னாலஜி எப்படி உதவுகிறது?,” என்ற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா, “இசை என்பது நமது வாழ்க்கையில் இசைக் கலைஞர்களின் டெக்னிக் ஆகத்தான் வருகிறது, டெக்னாலஜி மூலமாக வரவில்லை. இசை என்ற சக்தி மூலம் எனது ரசிகர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மீண்டும் மேடைக்கு வருவது எனக்குப் பெருமையான ஒன்று. அந்த இசை இரவை மறக்க முடியாத நினைவுகளுடனும், நிகழ்ச்சியாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியவில்லை,” என்றார்.

தெலுங்கிலும் பல எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து அங்கும் தனக்கென தனி இடத்தைத் தன் இசையால் பிடித்துள்ளவர் இளையராஜா. ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.