’3 அடி சுற்றளவு; 30 கிலோ எடை’ – கடற்கரையில் ஒதுங்கிய மர்ம சிலிண்டர்; நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டம்  கடலில் கரை ஒதுங்கிய மர்ம சிலிண்டரால் பரபரப்பு

நாகை நகராட்சிக்குட்பட்ட நம்பியார் நகர் கடற்கரையோரம் கடந்த 14 -ம் தேதி மர்ம சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை பார்த்த மீனவர் ஒருவர் நாகை கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் சிலிண்டரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 3 அடி சுற்றளவும், 30 கிலோ எடையும் கொண்ட சிலிண்டரில் sean dong yong quan என்ற வாசகமும், அதன் கீழே சீனா மொழியில் வாசகமும், அதற்கும் கீழே 400 999 7871 என்ற எண்களும் எழுதப்பட்டு இருந்தது. விமானம் மற்றும் கப்பலில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் ஆக இருக்கலாம் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 

image

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், சென்னையில் உள்ள வெடிகுண்டு கண்டறியும் மற்றும் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சென்னை வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் குழுவினர் நாகை வந்தனர். நாகை புதிய கடற்கரையில்  பாதுகாப்பிற்காக, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர்.

நாகை புதிய கடற்கரையில் குடியிருப்புகளுக்கு அப்பால், இருபுறமும் சிவப்பு வண்ண கொடியை நட்டு வைத்தனர். கடற்கரை பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் முன்கூட்டியே அப்புறப்படுத்தி அப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் புதிய கடற்கரையில், ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் சீனா சிலிண்டரை வைத்து, அதன் மீது மண் மூட்டைகளை அடக்கினர். பின்னர் பாதுகாப்பாக சிலிண்டரை வெடிக்க வைத்து செயல் இழக்க செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.