அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அங்கு இன்றுவரை நாள்தோறும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்கின்றது. இந்த நிலையில் போலந்து தலைநகர் வார்சா-வில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து செல்வதாக அறிவிக்கப்பட்டது. போலந்தை ஒட்டிய அண்டை நாடான உக்ரைன் செல்லவிருப்பது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது. […]
