Abhirami: இங்கெல்லாம் டாட்டூ போடுவாங்களா.?: பிக்பாஸ் நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தங்களை லைம் லைட்டிலே வைத்து கொள்கின்றனர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள். அந்த வரிசையில் இருக்கும் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீசன் மூன்றில் முகேனை காதலிப்பதாக கூறி சர்ச்சைகளை கிளப்பினார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் இவரும், இவரது எக்ஸ் காதலர் நிரூப்பும் கலந்து கொண்டனர். அப்போது அபிராமியும், பாலாஜியும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் பரவியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியில் வந்த பின்பு இந்த பேச்செல்லாம் அடங்கியது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபிராமியை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான நபர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவர் பதிவிடும் பதிவுகளும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

Anushka:நம்ம அனுஷ்காவா இது.?: லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.!

இந்நிலையில் தற்போது தன்னுடைய முதுகில் நடராஜர் திருவுருவத்தை பச்சை குத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அபிராமி. மேலும் அந்த பதிவில் பக்தி குறித்து யாரும் தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்றும் சிவனை எங்கே வைக்க வேண்டும் என்பது தன்னுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leo:லோகேஷ் வேலையை ஆரம்பிச்சுட்டாரு போல: லியோவில் காத்திருக்கும் மரண ட்விஸ்ட்.!

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இங்கெல்லாம் கூடவா டாட்டூ போடுவாங்க என அதிர்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். அண்மையில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் அபிராமி. இதனால் ‘லியோ’ படத்தில் இவரும் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

View this post on Instagram A post shared by Abhirami Venkatachalam �� (@abhirami.venkatachalam)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.