இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம்… பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கனேடிய மாகாணம் ஒன்று கடிதம்


இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம், அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் வேறு மாகாணங்களுக்கு அனுப்புங்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கேட்டுக்கொண்டுள்ளார் கியூபெக் பிரீமியர். 

நீண்ட காலமாக பிரச்சினையை ஏற்படுத்தும் எல்லை

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள Roxham Road என்ற பகுதியின் வழியாக ஏராளமான புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் நுழைகிறார்கள்.

இந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆக, இந்த பகுதி வழியாக கனடாவுக்குள் நுழைவோர், கியூபெக் மாகாணத்தை வந்தடைகிறார்கள்.

இப்படி பல்லாயிரக்கணக்கனோர் கியூபெக்குக்குள் நுழைவதால் சலிப்படைந்துள்ள கியூபெக் மாகாண பிரீமியர், இதற்கு மேல் அகதிகளை தங்கள் மாகாணத்தால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.

பிரதமருக்குக் கோரிக்கை

இப்படி Roxham Road வழியாக கியூபெக் மாகாணத்துக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தேவையானவற்றை இனி தங்களால் வழங்க இயலாது என்று கூறியுள்ள அம்மாகாண பிரீமியரான François Legault, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், Roxham Road வழியாக கியூபெக் மாகாணத்துக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை, அவர்கள் எல்லையை அடைந்ததுமே, உடனடியாக வேறு மாகாணங்களுக்கு அனுப்பிவிடுமாறு அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

கியூபெக்கின் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் திறன் எல்லை கடந்துவிட்டது என்று கூறியுள்ள Legault, இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், Roxham Road பகுதி ஒரு நாள் மூடப்படவேண்டும் என்றும், இந்த எல்லைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்வது, பிரதமராக உங்கள் தலையாய கடமை என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் Legault கூறியுள்ளார்.
 

இனி எங்களுக்கு அகதிகள் வேண்டாம்... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கனேடிய மாகாணம் ஒன்று கடிதம் | A Letter From Justin Trudeau

image – Sylvain Roy Roussel/CBC



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.