ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 2.0; ஆதாயம் யாருக்கு? குட்டையை குழப்பும் பாஜக!

அதிமுகவின் அடிப்படை விதி என்பது அடிமட்ட தொண்டன் முடிவெடுப்பது. இதைத் தான் எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார். பின்னர் வந்த ஜெயலலிதா உறுதிப்படுத்தினார். சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிய முதல் தர்ம யுத்தம் என்பது “நம்பர் 2” அரசியலாக போய் முடிந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்க துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

ஓபிஎஸ் தர்ம யுத்தம்அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமை நாற்காலியில் இடம் கிடைத்தாலும் அதை இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி பழனிசாமி உடன் பகிர்ந்து கொள்ளும் சூழல் தான் காணப்பட்டது. இதற்கிடையில் சசிகலா குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்பது என்ற தர்ம யுத்தத்தில் வெற்றியும் கண்டார். ஆனால் கட்சியிலும், ஆட்சியிலும் ஓபிஎஸ் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை.
மீண்டும் சசிகலாஇதனால் மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன் உடன் இணக்கமாக செல்ல வேண்டிய நிலை மறைமுகமாக ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல் ஓபிஎஸ் எந்த ஒரு கோஷ்டியும் சேர்த்து கொள்ளாதவர். தான் அதிகாரத்தில் இருந்த போதும் இப்படி தான் காணப்பட்டார். இதை பாஜக சரியாக உணர்ந்திருந்ததா? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.​
அணி மாறிய பாஜகஏனெனில் தொடக்கத்தில் இருந்து ஓபிஎஸ் தரப்பிற்கு பக்க பலமாக நின்று விட்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பக்கம் பாஜக மாறிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும். இருவரில் பாஜக யாருக்கு ஆதரவு அளித்தாலும் ஆதாயம் பார்க்க முடியாது. வரும் 2024 மக்களவை தேர்தலில் ஒருசில இடங்களில் வெற்றி பெற வேண்டுமெனில் அதிமுகவின் தயவு தேவைப்படுகிறது.
வாக்கு வங்கி அரசியல்அதுவும் ஒன்றுபட்ட அதிமுக என்பது முக்கியம். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா இல்லாமல் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற முடியாது. எடப்பாடி பழனிசாமி இல்லாமல் மேற்கு மண்டலத்தில் ஆதரவை பெற முடியாது. இந்த விஷயத்தில் ஓபிஎஸ் இறங்கி வந்தாலும் எடப்பாடி இறங்கி வருவதாக தெரியவில்லை. ஆனால் பாஜக அவ்வளவு சாதாரணமாக விட்டு விட விரும்பவில்லை.
ஒருங்கிணைந்த அதிமுகஎப்பாடு பட்டாவது ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறது. இத்தகைய குழப்பமான சூழலில் தான் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது தர்ம யுத்தத்தை அறிவித்துள்ளார். சென்னையில் தனது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் உடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் சட்ட விதிகளை பாதுகாக்க இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கியுள்ளோம்.
தர்ம யுத்தம் 2.0அதிமுகவை மீட்கும் வரை ஓய மாட்டோம் என சபதம் எடுத்துள்ளார். தற்போது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கின்றனர். அதிமுக அவர் கையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்காக கட்சி விதிகளில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தார்.
​​
பாஜக கணக்குஇதை தான் ஓ.பன்னீர்செல்வம் சுட்டுக் காட்டியுள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமி கையில் இருந்து அதிமுகவை மீட்க புறப்பட்டுள்ளது தெரிகிறது. இதில் ஓபிஎஸ் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பதை தாண்டி பாஜக ஆதாயம் தேடும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. இதை மனதில் வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதே சரியாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.