வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் மனு அளித்துள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2024ல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 76, ஏற்கனவே அறிவித்து விட்டார். இதையடுத்து குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக் கூடாது என்பதில் டிரம்ப் கவனமாக இருந்து வருகிறார். இதற்காக, டிரம்ப் குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, விருப்பம் தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விருப்ப மனு அளித்துள்ளார். இதனால் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் யாருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை.
குடியரசு கட்சி சார்பில் வாய்ப்பு கிடைப்பவர், 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுவார். இதனால் 2024 அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராக பதவியே ற்பார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement