தமிழக அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து ஒப்பந்ததாரர்களின் விவரம் அடங்கிய தரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கோரியுள்ளார். ஒருங்கிணைந்த இந்த தரவு தளத்தின் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர் இதனால் அனைத்து துறைகளும் இந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் குறைக்கும் முயற்சியில், ஒப்பந்ததாரர்களின் தரவுத்தளத்தை உருவாக்குவது உட்பட பல்வேறு […]