
நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது காளையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை முடித்ததும் அடுத்த மாதத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. அந்த படப்பிடிப்பின் போது நடைபெற்ற சம்பவம் குறித்து இயக்குநர் தமிழ் மனம் திறந்திருக்கிறார்.
படப்பிடிப்பில் காளை ஒன்று தமிழின் மேல் பாய்ந்து பத்து அடி தூரம் தூக்கி வீசிவிட்டதாம். அதன்பின் சூர்யாவை முட்ட அந்த காளை பாயந்த நிலையில், சூர்யா நூலிழையில் தப்பியதாக அவர் கூறியுள்ளார்.
newstm.in