சென்னை: இன்று 70வது பிறந்த நாள் கொண்டாடும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 70 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அவரது குடும்பத்தினர் குடியரசுதலைவர், துணைகுடியரசு தலைவர், பிரதமர் […]