மதுரை: நூறு நாள் வேலைத்திட்ட முறைகேடு ெதாடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மீண்டும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை முறைகேடின்றி மேற்ெகாள்ள வேண்டும். தவறு நடக்கும் இடங்களில் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் தரப்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பிப். 28ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.