“நீங்கள் பிடிவாதமானவரை திருமணம் செய்து கொண்டீர்கள்” ஷர்துல் தாக்கூர் மனைவி மித்தாலிக்கு சிறப்பு அறிவுரை


“நீங்கள் மிகவும் பிடிவாதமான மனிதரை திருமணம் செய்து கொண்டு  இருக்கிறீர்கள்” என குறிப்பிட்டு ஷர்துல் தாக்கூரின் மனைவி மித்தாலி பருல்கருக்கு KKR உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

ஷர்துல் தாக்கூர்-மித்தாலி பருல்கர் திருமணம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மற்றும் மித்தாலி பருல்கர் ஆகிய இருவரும் மும்பையில் திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டனர்.

31 வயதான ஷர்துல் தாக்கூர், மித்தாலி பருல்கர் இருவரும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நிலையில்,  கடந்த ஆண்டு நவம்பரில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

“நீங்கள் பிடிவாதமானவரை திருமணம் செய்து கொண்டீர்கள்” ஷர்துல் தாக்கூர் மனைவி மித்தாலிக்கு சிறப்பு அறிவுரை | Shardul Thakurs Wife Mittali Gets Hilarious AdviceTwitter 

ஷர்துல் தாக்கூர் கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல்-லில் KKR-ஐ பிரதிநிதித்துவப்படுத்த இருக்கிறார்.


மித்தாலிக்கு அறிவுரை

ஷர்துல் தாக்கூர்-மித்தாலி பருல்கர் இடையிலான திருமணத்தை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், ஷர்துலின் மனைவி மித்தாலிக்கு ஒரு சிறப்பு ஆலோசனையைப் பகிர்ந்து கொண்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள இது தொடர்பான வீடியோவில், “உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், கிரிக்கெட் மைதானத்தில் நான் சந்தித்ததில் மிகவும் பிடிவாதமான மனிதரை நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள், அவர் எப்போதும் தான் செய்வது சரி என்று நினைக்கிறார் மற்றும் முழுவதும் அதை நம்புகிறார்.”

“ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியும், ஷர்துல் தாக்கூர் எதிர்காலத்தில் தலை குனிந்து மித்தாலி நி சொல்வது சரி என்று கூறும் நிலை வரும் அதற்காக காத்து இருக்கிறேன்” என அபிஷேக் நாயர்  அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

“நீங்கள் பிடிவாதமானவரை திருமணம் செய்து கொண்டீர்கள்” ஷர்துல் தாக்கூர் மனைவி மித்தாலிக்கு சிறப்பு அறிவுரை | Shardul Thakurs Wife Mittali Gets Hilarious AdviceTwitter 

“நீங்கள் பிடிவாதமானவரை திருமணம் செய்து கொண்டீர்கள்” ஷர்துல் தாக்கூர் மனைவி மித்தாலிக்கு சிறப்பு அறிவுரை | Shardul Thakurs Wife Mittali Gets Hilarious AdviceTwitter 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.