சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி…


சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி. ஆம், இந்த ஆண்டில் வீட்டு வாடகைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு அடிமேல் அடி

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டில் வீட்டு வாடகைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இந்த வாடகை உயர்வு இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்னும் செய்தி, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, பணவீக்கம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு அடி மேல் அடியாக அமைந்துள்ளது.

மார்ச் 1ஆம் திகதியாகிய இன்று, வீடுகளுக்கு பொறுப்பான பெடரல் வீட்டு வசதி அலுவலகம், வீட்டு உரிமையாளர்கள் வாடகையை நிர்ணயிப்பதற்கு அடிப்படையான வட்டி வீத தரநிலைப் பட்டியலை வெளியிட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி... | Important Message For Residents Of Rented Houses

அத்துடன், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் வீட்டுக்காக செய்யும் செலவுகளையும் வாடகையுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆகவே, இந்த ஆண்டு வீடுகளின் வாடகை உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

2025வாக்கில் வீட்டு வாடகை 20 சதவிகிதம் அளவுக்கு உயரும் என UBS வங்கி கணித்துள்ளது. ஆனால், இந்த உயர்வில் பணவீக்கம் தொடர்பான உயர்வு இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.