கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சடையமங்கலம் அருகே சென்றபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை அதிவேகமாக முந்த முயன்றதாக தெரிகிறது.
அப்போது, பேருந்தின் பின்பகுதி பைக்கின் மீது மோதியதில், அதில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரும் கல்லூரி மாணவரும் பேருந்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் புனலூர் பகுதியை சார்ந்த பிரஜித் மற்றும் சிகா என்பதும் தெரிய வந்துள்ளது.
பேருந்தின் அதிவேகமும் ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை பார்த்த பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சிகா என்ற கல்லூரி மாணவியின் தலை மீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த கல்லூரி மாணவரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து சடையமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.