விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நபர்… சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு


பயணிகள் விமானத்தில் வெடி பொருட்களை கடத்த முயன்ற அமெரிக்கர் ஒருவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடி பொருட்களுடன் பயணி

இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ள அதிகாரிகள், Lehigh Valley சர்வதேச விமான நிலைய அதிகாரிகளால் சோதனையிடப்பட்ட பைக்குள்ளேயே வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நபர்... சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | Pennsylvania Man Custody Found Explosive Device

@getty

பென்சில்வேனியா பகுதியை சேர்ந்த மார்க் மஃப்லி என்பவர் Allegiant விமான சேவை நிறுவன விமானம் ஒன்றில் புளோரிடா மாகாணத்தின் சான்ஃபோர்ட் பகுதிக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அவர் எடுத்துவந்த பை ஒன்று அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, முன்னெடுக்கப்பட்ட சோதனையில் வெடி குண்டு தொடர்பான பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து நழுவ முயன்றுள்ளார்.
இந்த நிலையில், பொலிசார், எஃப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் என முக்கிய அதிகாரிகள் அனைவரும் விமான நிலையத்தில் திரண்டனர்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நபர்... சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | Pennsylvania Man Custody Found Explosive Device

@facebook

அதிகாரிகளால் கைது

விமான நிலையத்தின் முக்கிய பகுதி உடனடியாக மூடப்பட்டது.
அத்துடன் விரிவான சோதனைக்கு பின்னர் அந்த பையானது விமான நிலையத்திற்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டது.

இதனிடையே கைது செய்யப்பட்ட மார்க் மஃப்லி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
சம்பவத்தின் போது விமான நிலையத்தில் இருந்து தப்பிய மார்க் மஃப்லி, தமது குடியிருப்பில் ஒளிந்திருந்த நிலையில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நபர்... சோதனையில் அதிர்ந்த அதிகாரிகள்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | Pennsylvania Man Custody Found Explosive Device

@district court

குறித்த வெடி பொருட்கள் அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய சம்பவம் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளதாக அதிகாரிகள் தரப்பால் கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.