புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம்


புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணமடைந்துள்ளார்.

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர்

சுவிஸ் மருத்துவரான Dr நட்டாலியா (Dr Natalia Thiebaud Kondratieva), சோவியத் யூனியனில் பிறந்தவர்.

புடினுடைய இரகசிய காதலி என்றும், அவரது பிள்ளைகளின் தாய் என்றும் அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva)வுக்கு பிரசவம் பார்த்தவர் இந்த Dr நட்டாலியாதான்.

Dr நட்டாலியா, அலீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவுக்கு தலைமை வகிக்க, அவருடன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரான Petra Caterina Maria Donati-Genet என்பவரும், செவிலியரான Stella Ghizelu என்பவரும் சுவிட்சர்லாந்திலிருந்து மாஸ்கோவுக்குச் சென்றதாக ரஷ்ய ஊடகம் ஒன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம் | Doctor Who Delivered Putins Secret

Image: Proekt Media

ரஷ்யாவின் ஒரே அப்பா

சுவிட்சர்லாந்தில் நீண்டகாலமாக வாழ்ந்துவந்த Dr நட்டாலியா, 2020ஆம் ஆண்டு சமூக ஊடகம் ஒன்றில், மொத்த அன்னை ரஷ்யாவுக்கும் ஒரே அப்பா புடின் தான் என்றும், என்னை மறக்காததற்காக நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், Dr நட்டாலியா, கடந்த வெள்ளிக்கிழமையன்று சுவிட்சர்லாந்தில் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படாவிட்டாலும், அவர் புற்றுநோயால் அவதியுற்றுவந்ததாக தெரிகிறது.

இதுவரை எப்படி புடினுக்கும் அலீனாவுக்குமான தொடர்பு குறித்தோ, அவருக்கு பிள்ளைகள் இருப்பது குறித்தோ அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லையோ, அதேபோல, அந்த பிள்ளைகளுக்கு Dr நட்டாலியா பிரசவம் பார்த்த செய்தியும் வெளிப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம் | Doctor Who Delivered Putins Secret


Image: Social media/EAST2WEST NEWS

புடினுடைய இரகசிய காதலிக்கு பிரசவம் பார்த்த சுவிஸ் மருத்துவர் மரணம்: இதுவரை வெளிவராத இரகசியம் | Doctor Who Delivered Putins Secret 

Image: Social media/EAST2WEST NEWS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.