”உங்கள் இதயத்தை பலமாக வைத்திருங்கள்” – மாரடைப்பு ஏற்பட்டதாக சுஷ்மிதா சென் அதிர்ச்சி தகவல்!

பாலிவுட்டின் பிரபல நடிகையான சுஷ்மிதா சென், இரண்டு தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து பதிவிட்டிருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது பெரிய திரையிலிருந்து விலகி, வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதற்கிடையே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில், சுஷ்மிதா சென், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தன் தந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து வெளியிட்டிருக்கும் அந்தப் பதிவில், “உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும்… இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள். இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

image

எனது இருதய நோய் நிபுணர் ‘எனக்கு ஒரு பெரிய இதயம் இருக்கிறது’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு நன்றி. நான் நலமுடன் இருக்கிறேன், மீண்டும் வாழத் தயாராக இருக்கிறேன் என்பதை என் நலம் விரும்பிகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் அறிவிப்பதற்காகவே இந்தப் பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.