டெல்லி: இன்றைய டெக் யுகத்தில் கற்றலில் புதுமை முறையான இணையவழியில் மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். இருந்தாலும் இந்தியாவில் சுமார் 23 கோடி குழந்தைகளுக்கு லேப்டாப் சாதனத்தின் அணுகல் கிடைக்கப்பெறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இணையவழி கற்றலின் பலனை அவர்கள் முறையாக பெறுவதில்லையாம். அதற்கு தீர்வு காணும் நோக்கில் மலிவு விலையில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது பிரைம்புக்.
ஷார்க் டேங்க் சீசன் 2 மூலம் நிதியுதவி பெற்று நிறுவப்பட்ட நிறுவனம்தான் பிரைம்புக். தற்போது இந்திய சந்தையில் ‘பிரைம்புக் 4ஜி’ என்ற மலிவு விலையிலான லேப்டாப்பை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இது விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரைம்புக் 4ஜி சிறப்பு அம்சங்கள்
- பிரைம் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த லேப்டாப் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குமாம்
- மீடியாடெக் எம்டி8788 ப்ராசஸரை கொண்டுள்ளது
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி ஸ்டோரேஜ் திறன் (200ஜிபி வரை எக்ஸ்பேண்ட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது)
- இதன் திரை அளவு 11.6 இன்ச் உள்ளது
- 7.6V 4000mAh UTL பேட்டரி
- யூஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் இயர்போன் ஜேக்
- இதன் விலை ரூ.16,990
- இருந்தாலும் அறிமுக சலுகையாக 2,000 ரூபாய் வரையில் தள்ளுபடி, மாத தவணை திட்டம் போன்றவையும் உள்ளதாம்
Introducing the revolution – Primebook 4G laptop! Ab learning hogi better aur possibilities, bigger than ever
Launching exclusively on Flipkart on 11th March!#FlipKart #ExclusivelyAvailable #Primebook #PrimeOS #Gaming #AndroidLaptop #PoweredByMediaTek #MediaTek pic.twitter.com/lhxvblhzDq— Primebook India (@primebookindia) March 1, 2023