புதுடில்லி: ரஷ்ய- உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் விரிவாக ஆலோசித்தார்.
ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு டில்லியில் நடந்து வருகிறது.
இம்மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் ஏற்பட்டுள்ள சர்வதேச பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுப்பது பற்றியும், இந்திய -பிசிபிக் பகுதியில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விவாதித்தனர்.
முன்னதாக உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவார்வ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இடையே விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement