ரஷ்ய தீமை என்றும் வெல்லாது…ஏவுகணை தாக்குதலை எதிர்த்து கொந்தளித்த ஜெலென்ஸ்கி


ஜபோரிஜியாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், “ரஷ்ய தீமை வெல்லாது” என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரை சுற்றி வளைக்க திட்டமிட்டு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனின் ஜபோரிஜியா(Zaporizhzhia) நகரின் மீது அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தீமை என்றும் வெல்லாது…ஏவுகணை தாக்குதலை எதிர்த்து கொந்தளித்த ஜெலென்ஸ்கி | Russian Evil Won T Win Says ZelenskyySky News

மேலும் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து 11 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருவதாகவும் அவசர சேவைகள் இன்று தெரிவித்துள்ளன.


ரஷ்ய தீமை வெல்லாது

இதற்கிடையில் ஜபோரிஜியா நகர் மீது நடத்தப்பட்ட குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “பயங்கரவாதிகள்” குடியிருப்பு கட்டிடத்தை தாக்கினர், அதில் குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் உக்ரைன் “ரஷ்ய தீமையை ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிக்காது” என்றும் தெரிவித்துள்ளார். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.